போதைப்பொருள் பாவனை உச்சம் – மாணவர்களை பாதுகாக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அதிரடி நடவடிக்கை!
Tuesday, December 20th, 2022போதைப்பொருள் பாவனையிலிருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாக்க ஆசிரியர்களுக்கு பயிற்சிகளை ஆரம்பிக்கும் நோக்கில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் நேற்றையதினம் நடைபெற்ற போதைப்பொருள் பாவனையிலிருந்து பாடசாலை மாணவர்களை மீட்பது தொடர்பில் இங்கு விவாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை முதற்கட்டமாக கொழும்பு மாவட்டத்தில் 200 ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அண்மையில், மேல்மாகாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 75 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே யாழ்ப்பாணத்திற்கு வருகை!
மக்கள் கூடுவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ்மா அத...
தற்காலிக சாரதி அனுமதி பத்திரம் பெற்ற 6 இலட்சம் பேருக்கு சாரதி அனுமதி பத்திரத்தை அச்சிட்டு தபால் மூலம...
|
|