போதைப்பொருளை கட்டப்படுத்த வடக்கில் களமிறக்கப்பட்டுள்ள பொலிஸாரின் மோப்ப நாய்கள்!
Saturday, November 5th, 2022வடக்கில் போதைப் பொருள் பாவனை மற்றும் விநியோகம் என்பவற்றை கட்டுப்படுத்தும் நோக்குடன் வவுனியா, நெளுக்குளம் பொலிஸார் மோப்ப நாயின் துணையுடன் விசேட சோதனை நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
வவுனியா, நெளுக்குளம் சந்திப் பகுதியில் நேற்று (04) காலை 9 மணி முதல் மதியம் 1 மணிவரை இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அண்மைக்காலமாக வடக்கில் போதைப் பொருள் பாவனை மற்றும் பரிமாற்றம் என்பன அதிகரித்துள்ளதுடன், வவுனியாவிலும் போதைப் பாவனை அதிகரித்துள்ளது.
இதை கட்டுப்படுத்தும் வகையில் நெளுக்குளம் பொலிசார் மோப்ப நாயின் துணையுடன் வீதியில் சென்ற பேரூந்துகள், சொகுசு வாகனங்கள்ட என்பவற்றை மறித்து சோதனையிட்டதுடன், சந்தேகத்திற்கிடமான இடங்கள் மற்றும் நபர்களையும் சோதனையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
சுற்றுலாவை மேம்படுத்த பெல்505 ரக உலங்குவானூர்தி!
யுனெஸ்கோவில் இருந்து அமெரிக்கா விலகியுள்ளது!
யாழ் மாவட்டத்தில் 157 வேட்புமனுக்கள் சமர்ப்பிப்பு - 150 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் 7...
|
|