போதைப்பொருளுக்கு அடிமையாகும் நிலையில் பாடசாலை மாணவர்கள்!

Monday, December 17th, 2018

பாடசாலை மாணவர்களை பல்வேறு போதைப்பொருள் பயன்பாட்டுக்கு அடிமைப்படுத்தும் நிலையொன்று உருவாகியுள்ளதாக போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது.

அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக செயலணியின் பணிப்பாளர் மருத்துவர் சமந்த குமார கித்தலாரச்சி குறிப்பிட்டார்.

புகையிலை மற்றும் வெற்றிலை போன்ற இலகுவாக கிடைக்கின்ற போதைப்பொருட்களை பயன்படுத்தும் வீதம் அதிகரித்துள்ளது.

நூற்றுக்கு 5 சதவீதமான மாணவர்கள் இவ்வாறான போதைப்பொருட்களை பயன்படுத்த முயற்சிப்பதாகவும் செயலணியின் பணிப்பாளர் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், தேசிய ரீதியில் புகைத்தல் பொருட்கள் பாவனை குறைவடைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: