போதியளவு அத்தியாவசிய உணவுப்பொருட்கள் கையிருப்பில்!

Monday, March 26th, 2018

புத்தாண்டு காலப்பகுதிக்‌கு தேவையானளவு அத்தியாவசிய உணவுப்பொருட்கள் கோட்டை மற்றும் புறக்கோட்டை வர்த்தக நிலையங்களில் கையிருப்பில் உள்ளதாக அத்தியாவசியஉணவுப்பொருட்கள் இறக்குமதியாளர்கள், வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தப் பொருட்களின் விலைகள் நிலையான மட்டத்தில் உள்ளதாகவும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் பல பொருட்களின் விலைகள் குறைந்து காணப்படுவதாகவும் குறித்த சங்கத்தின்ஊடகப் பேச்சாளர் ஹேமக பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

பெரும்போகத்தில் அறுவடை செய்யப்பட்ட உள்நாட்டு அரிசி சந்தைக்கு வருகிறது. வவுனியாவிலிருந்தும் பெருந்தொகை அரிசி சந்தைக்கு வர உள்ளதுடன் கிழக்கு மாகாணத்தில் இருந்து ஒருதொகை அரிசி சந்தைக்கு வந்துள்ளது.

மேலும் குறித்த அரிசி வகைகள் சந்தைக்கு கிடைத்த பின்னர், புத்தாண்டு காலப்பகுதிக்கு முன்னதாக அரிசி விலை மேலும் குறைவடையும் என்றும் வர்த்தகர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர்ஹேமக பெர்ணாண்டோ கூறியுள்ளார்.

Related posts: