“போட் சிட்டி”யில் நடைப்பாதை திறப்பு – இலங்கையின் அரச தலைவர்கள் பங்கேற்பு!

Sunday, January 9th, 2022

கொழும்பு போர்ட் சிட்டியில் ( The Port City Marina Promenade) 500 மீற்றர் துாரத்தைக் கொண்ட பொதுமக்களுக்கான நடைப்பாதை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான ராஜதந்திர உறவின் 65 ஆவது நிறைவை முன்னிட்டு இந்த நிகழ்வு இன்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி ஆகியோர் பங்கேற்றனர்.

இலங்கைக்கு இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்டு 18 அதிகாரிகளுடன் வந்துள்ள சீன வெளியுறவு அமைச்சர் இன்று இலங்கையின் ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: