போட்டி மிகுந்த பொருள் ஏற்றுமதிக்கான சந்தர்ப்பம்!

Monday, May 22nd, 2017

இலங்கைக்கு மீண்டும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை கிடைத்தமையால் போட்டித் தன்மையுடன் மீண்டும் ஐரோப்பிய சந்தையில் ஏழாயிரத்து 200 பொருட்களை ஏற்றுமதி செய்யக்கூடிய ஆற்றல் கிடைத்திருப்பதாக ஆரம்ப கைத்தொழில்துறை அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் சில வருடங்களில் உலகின் பாரிய வர்த்தக சந்தையாக ஆசிய சந்தை தரமுயரும் . ஆடைத் தொழில்துறை ஏற்றுமதியில் பங்களாதேஷ் போன்ற நாடுகள் குறைவான சம்பளம் மற்றும் குறைவான செலவு ஆகியவற்றின் அடிப்படையில் உலக சந்தைக்கு குறைந்த விலையில் தயாரிப்புகளை விநியோகித்து வருகிறது. இருந்த போதிலும் எமது நாட்டின் தரமான தயாரிப்பின் காரணமாக சந்தையில் எமது தயாரிப்புக்களுக்கு பெரு வரவேற்பு உண்டு என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

29 நாடுகளைக் கொண்டுள்ள இந்த அமைப்பில் 550மில்லியன் மக்களிடையே பொருட்களை பரிமாறக்கூடிய வர்த்தக செயற்பாட்டுக்கான வசதிகளை வழங்கக்கூடியதே ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையாகும் என்றும் அமைச்சர் கூறினார்.

Related posts: