போட்டித் தடையை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை!

Wednesday, April 4th, 2018

அவுஸ்திரேலிய கிரிக்கட் அணியின் மூன்று வீரர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவுஸ்திரேலிய கிரிக்கட் வீரர்களின் ஒழுங்கமைப்புதெரிவித்துள்ளது.

இந்த கோரிக்கை அவுஸ்திரேலிய கிரிக்கட்டுக்கு விடுக்கப்பட்டுள்ளது.

மணல்காகிதத்தைக் கொண்டு பந்தினை சேதப்படுத்திய குற்றத்துக்காக அவுஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித் மற்றும் டேவிட் வோர்னர் ஆகியோருக்கு ஒரு ஆண்டு காலத்துக்கும், கமரன்பென்க்ராஃப்ட்டுக்கு 9  மாத காலத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த தீர்மானம் ஏற்புடையதல்ல என்று அவுஸ்திரேலிய கிரிக்கட் வீரர்கள் ஒழுங்கமைப்பின் தலைவர் க்ரெக் டயர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் குறித்த தடை தொடர்பில் அவுஸ்திரேலிய கிரிக்கட் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Related posts: