போக்குவரத்தை சீராக்கும் வகையில் பயணிகள் படகு ஒன்றினை பெற்றுக்கொடுங்கள் – இந்தியத் தூதுவரிடம் நெடுந்தீவு பிரதேச செயலாளர் கோரிக்கை!

Friday, December 1st, 2023

நெடுந்தீவு மக்களுக்கான போக்குவரத்தினை சீராக்கும் வகையில் பயணிகள் படகு ஒன்றினை பெற்றுக்கொடுக்குமாறு இந்தியத் தூதுவரிடம் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான இந்திய தூதுவர் நேற்று நெடுந்தீவுக்கான விஜயத்தினை மேற்கொண்டு, நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்றிருந்தார்.

இதன்போதே இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லேவிடம் நெடுந்தீவு பிரதேச செயலாளர் சத்தியசோதி குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கோரிக்கையினை இந்திய அரசாங்கத்திற்கு அறிவித்து, கலந்துரையாடியதன் பின்னர், அது தொடர்பான நடவடிக்கையினை எடுப்பதாக இந்திய தூதுவர் உறுதியளித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

000

Related posts: