போக்குவரத்து வசதியின்மையால் மாணவர்கள் பெரும் அவதி – ஒட்டுசுட்டான் உதவிப் பிரதேச செயலர்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுச்சுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஒலுமடு, அம்பகாமம் கிராமங்களுக்கு போக்குவரத்து வசதியின்மையால் பாடசாலை மாணவர்கள் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் தமது கல்வி தொடர முடியாமல் இருப்பதாக ஒட்டுச்சுட்டான் உதவிப் பிரதேச செயலர் ரமேஸ் தெரிவித்துள்ளார்.
அவர் இது குறித்து தெரிவிக்கையில் இந்தப் பிரதேசத்தில் உள்ள 45 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதில் சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். இப்பிரதேசத்தில் மாணவர்களுக்கென பஸ் சேiவையினை முன்னெடுக்குமாறு கிராம அமைப்புக்களாலும், மக்கள் பிரதிநிதிகளாலும் உரியவர்களுக்கு முறையிட்டபோதும் இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதைவிட இப்பிரதேசத்தில் உரிய போக்குவரத்து வசதியின்மையால் கூடதலான சிறுவர்கள் பாடசாலை கல்வியைவிட்டு இடைவிலகியுள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|