போக்குவரத்து பேருந்து உரிமையாளர்கள் மீண்டும் தொழிற்சங்கப் போராட்டம்!

Wednesday, August 8th, 2018

பேருந்து போக்குவரத்து சேவையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் எதிர்வரும் 12 ஆம் திகதி நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மாகாண பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை எதிர்வரும் 10 ஆம் திகதி, டீசல் விலையில் மேற்கொள்ளப்படும் திருத்தம் காரணமாக லீற்றரின் விலை 10 ரூபாயால் அதிகரிக்கப்படுவதால் ஆகக் குறைந்த பேருந்து கட்டணம் உள்ளடங்களாக பஸ் கட்டணமும் அதிகரிக்கப்படும் என, அகில இலங்கை பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: