போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கூகுளின் உதவி – தேசிய பொலிஸ் ஆணையகம்!

Saturday, June 23rd, 2018

கூகுள் தரவுகளின் ஊடாக போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த முடியுமென நம்புவதாக தேசிய பொலிஸ் ஆணையகம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவினது வாராந்த கலந்துரையாடலொன்று மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

இதில் போக்குவரத்து நிபுணர் பேராசிரியர் அமல் குமரேஜ் கலந்து கொண்டார்

இதன்போது அமல் குமரேஜ் பாரிய போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்கு கூகுள் தரவினை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது தொடர்பாக குறிப்பொன்றை வழங்கினார்.

அத்துடன் இலங்கையிலுள்ள பிரதான நகரங்களான கொழும்பு மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதன் காரணமாக ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பிலும் அவர் விபரித்தார்.

Related posts: