போக்குவரத்து சீரின்மை: கல்வியை விட்டு இடைவிலகும் மாணவர்கள்.

Sunday, September 17th, 2017

கிளிநொச்சி மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் சீரான போக்கவரத்து வசதிகள் இல்லாமையால் பாடசாலை மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

புதுமுறிப்பு கோணாவில் பன்னங்கண்டி மருதுநகர் கட்டைக்காடு ஆனைவிழுந்தான் கல்லாறு நாகேந்திரபுரம் உள்ளிட்ட பின்தங்கிய பகுதிகளிலே சீரான போக்குவரத்து வசதிகள் இன்மையால் இப்பகுதிகளில் உள்ள மாணவர்கள் பாடசாலைகளக்கு செல்வதற்கு பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக பின்தங்கிய கிராமங்களில் உள்ள ஆரம்பப்பாடசாலைகளில் கல்விகற்று இடைநிலை மற்றம் உயர்கல்வி நடவடிக்கைகளுக்காக வேறு பாடசாலைகளுக்குச் செல்லும் நிலையில் சில கிராமங்களக்கான போக்குவரத்து வசதிகள் சீரின்றியும் காணப்படுவதால் பெருமளவான பாடசாலை மாணவர்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால் சிறார்கள் கல்வியை விட்டு இடைவிலகும் நிலையும் காணப்படுகின்றது.

Related posts: