போக்குவரத்து சபையின் எதிர்கால குறித்து விசேட கலந்துரையாடல்!

இலங்கை போக்குவரத்து சபையின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் பலருடன் நேற்று (22) விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடல் சுமார் 2 மணித்தியாலத்திற்கு நீடித்ததாக போக்குவரத்து பிரதியமைச்சர் அசோக் அபேசிங்க குறிப்பிட்டார். சுயவிருப்பின் பேரில் ஓய்வில் செல்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வழிமுறை மற்றும் போக்குவரத்து துறையை மேம்படுத்துவதற்காக திறைசேரியிடமிருந்து நிதியைப் பெற்றுக்கொள்ளல், பேருந்து பிரயாணத்திற்கான முற்பண அட்டை முறை போன்ற விடயங்கள் குறித்து காலந்துரையாட்பட்டதாக பிரதியிமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பேருந்து போக்குவரத்து தொடர்பில் ஒன்றிணைந்த கால அட்டவணைகளை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பிலும் தொழிற்சங்க தலைவர்களுடன் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக போக்குவரத்து பிரதியமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அதேபோன்று பயணிகள் பேருந்து போக்குவரத்து துறையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து தொழிற்சங்கங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளால் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோருக்கு எடுத்துரைக்கப்பட்டதாகவும் பிரதியமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்தார். இதுதவிர இலங்கை போக்குவரத்து சபையை மறுசீரமைத்து அதன் சேவையை வெற்றியுடன் முன்னெடுத்துச் செல்வது குறித்தும் இந்த விசேட கலந்துரையாடலில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
Related posts:
|
|