போக்குவரத்து கட்டுப்பாடுகளை மேலும் இறுக்கமாக்க வேண்டியுள்ளது – பிரதி சுகாதார நோயாளிகளின் பணிப்பாளர் நாயகம் வலியுறுத்து!

எதிர்காலத்தில் கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தெரிவித்துள்ள பிரதி சுகாதார நோயாளிகளின் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் இதனால் போக்குவரத்து கட்டுப்பாடுகளை மேலும் இறுக்கமாக்க வேண்டியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் போக்குவரத்து கட்டுப்பாடுகளை கடுமையாக்குவதன் மூலமே பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை குறைக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு முன்னர் நாளாந்தம் 3 ஆயிரத்து 500 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அவ்வேளை நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என கருதப்பட்டது. ஆனால் நாடளாவிய போக்குவரத்து கட்டுப்பாடுகள் காரணமாக அது நிகழவில்லை எனவும் தெரிவித்துள்ள ஹேமந்த ஹேரத் இதன்காரணமாக போக்குவரத்து தடைகளை மேலும் கடுமையாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|