போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளபோதிலும் நோயாளர்கள் எண்ணிக்கை குறையவில்லை – பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் சுட்டிக்காட்டு!

Sunday, June 6th, 2021

போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள போதிலும்  நோயாளர்கள் எண்ணிக்கை குறையவில்லை என  பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு குறையைவில்லை எனவும் பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல்ரோகண தெரிவித்துள்ளார்.

அதேநேரம் பலர் போக்குவரத்து கட்டுப்பாடுகளை மீறுகின்றனர் என சுட்டிக்காட்’டியுள்ள பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர்,  தற்போது போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள நிலையில் அடுத்தவாரமளவில் நோயாளர்கள் எண்ணிக்கை குறைவடையலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் குறித்த கட்டுப்பாடகளூடாக நாங்கள் எதிர்பார்த்தளவிற்கு தொற்றின் தன்மை வீழ்ச்சியடைந்து காணப்படாது என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: