போக்குவரத்து அமைச்சரின் தீர்மானத்தை செயற்படுத்த இடமளியோம்!

Thursday, November 3rd, 2016

பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளில் வாயிற் காப்போராக கடமையாற்ற, பாதுகாப்பு தரப்பினரை நியமிக்கும் போக்குவரத்து அமைச்சரின் தீர்மானத்தை செயற்படுத்த இடமளிக்கப் போவதில்லை என, பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளில் கடமையாற்றும் வாயிற் காப்போர் சங்கம் தெரிவித்துள்ளது.

தமது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் பொருட்டு, அமைச்சரால் மற்றுமாரு பிரச்சினையை தோற்றுவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக, அந்த சங்கத்தின் செயலாளர் நிமல் சந்திரசிறி குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளில் கடமையாற்றும் வாயிற் காப்போர், மேற்கொண்டுள்ள தொடர் வேலை நிறுத்தம் காரணமாக, அந்தக் கடமைகளில் பாதுகாப்பு தரப்பினரை ஈடுபடுத்த நடவடிக்கை எடுப்பதாக, நேற்று போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

08-who34566-600 copy

Related posts: