போக்குவரத்துசபை மற்றும் புகையிரத திணைக்கள ஊழியர்களின் விடுமுறைகள் மட்டு!

Monday, April 8th, 2019

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு, இன்று(08) முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை இலங்கை ​போக்குவரத்து சபை மற்றும் புகையிரத திணைக்கள ஊழியர்களின் விடுமுறைகள் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் இன்று(08) முதல் இலங்கை போக்குவரத்து சபை மேலதிக பேருந்து மற்றும் புகையிரத சேவைகளை முன்னெடுக்க உத்தேசித்துள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் எல் பீ ஜயம்பதி தெரிவித்துள்ளார்.

இதன்படி, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 1000 ற்கும் அதிகமான பேருந்துகளும் 20 புகையிரதங்களும் மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இன்று(08) முதல் போக்குவரத்து நடவடிக்கைகளை முறையாக முன்னெடுப்பதற்காக ஒன்றிணைந்த நடவடிக்கை பிரிவொன்றை ஸ்தாபிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச் சாட்டில்  கைது செய்யப்பட்ட 39 இந்தியமீனவர்கள் யாழில் விடுதலை!
பாதசாரிகள் கடவையை பயன்படுத்தாதவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை - போக்குவரத்து பிரிவின் அத்தியட்சகர்!
திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் மேலும் 50 வருடங்களுக்கு எல்ஐஓசிக்கு குத்தகைக்கு வழங்கப்படவுள்ளன - வலுசக...