பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்  எம்.ஆர்.லத்தீப் நியமனம்!

Thursday, August 18th, 2016

 

பொலிஸ் விசேட அதிரடிப் படையின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர்.லத்தீபை பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவால் நியமனக்கடிதம்  இன்று (18 வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப் படைக் கட்டளைத் தளபதியை நியமிப்பது தொடர்பில் பொலிஸ் ஆணைக்குழு வழங்கிய பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு பொலிஸ் மா அதிபர், இழுத்தடிப்பு செய்து வந்த நிலையில்இன்று (18) அதற்கான நியமனம் பொலிஸ்மா அதிபரால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

1979ஆம் ஆண்டு, உப பொலிஸ் பரிசோதகராக பொலிஸ் சேவையில் இணைந்த எம்.ஆர்.லத்தீப், இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பாதுகாப்பு விவகாரம் தொடர்பில் மிக நீண்ட அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: