பொலிஸ் மா அதிபர் வெளிநாடு பயணம்!

Saturday, March 11th, 2017

எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள தெற்காசிய மற்றும் அயல் நாடுகளின் பொலிஸ் தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு பங்களாதேஷ் சென்றுள்ளார்.

அச்சுறுத்தலான வன்முறை செயல், அடிப்படைவாதம் மற்றும் சர்வதேச குற்றங்களை அடக்குவது சம்பந்தமாக பிராந்திய நாடுகளின் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்வது இந்த மாநாட்டின் நோக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: