பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்னவுக்கு சேவை காலத்தை மேலும் நீடிக்க அரசியலமைப்பு பேரவை அனுமதி!
Saturday, July 15th, 2023பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்னவுக்கு வழங்கப்பட்ட சேவை காலத்தை மேலும் நீடிக்க அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில், இன்று நாடாளுமன்றில் இடம்பெற்ற அரசியலமைப்பு பேரவைக் கூட்டத்தில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் திகதி காவல்துறைமா அதிபராக நியமிக்கப்பட்ட சீ.டீ. விக்ரமரத்ன, கடந்த மார்ச் மாதம் 26ஆம் திகதி, ஓய்வுபெறவிருந்தார்.
எனினும், இதன்போது, அவருக்கு 3 மாதகால சேவை நீடிப்பை வழங்க, ஜனாதிபதியால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்தக் கால நீடிப்பு, கடந்த மாதம் 26ஆம் திகதி நிறைவடைந்தது.
இதற்கமைய, 2 வாரங்களாக, காவல்துறைமா அதிபர் பதவிக்கு வெற்றிடம் நிலவுகின்ற நிலையில், முன்னாள் காவல்துறைமா அதிபர் சீ.டீ. விக்ரமரத்னவுக்கு, மேலும் 3 மாதகால சேவை நீடிப்பை வழங்க, கடந்த 9ஆம் திகதி, தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|