பொலிஸ் தலைமையகத்தின் வீடியோ குறித்து விசாரணை!

Thursday, August 17th, 2017

பொலிஸ் தலைமையகத்தில் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தொடர்பில் வெளியான வீடியோ காட்சி தொடர்பில் பல பொய்ப் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவண் குனசேகர தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குனசேகர இதனை கூறினார்.

எவ்வாறாயினும் அந்த சம்பவம் தொடர்பில் தற்போது விசாரணை முன்னெடுக்கப் பட்டுள்ளதாகவும்,  அது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் சிவில் சட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related posts: