பொலிஸ் சிரேஷ்ட அதிகாரிகள் தரப்பில் குறைபாடுகள் இருந்தால் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் – பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு!

Friday, March 15th, 2024

பொலிஸ் சிரேஷ்ட அதிகாரிகள் தரப்பில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், அந்த அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபர் காலி மற்றும் எல்பிட்டிய பொலிஸ் பிரிவுகளின் சிரேஷ்ட அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்

இதேவேளை பெப்ரவரி 26 மற்றும் மார்ச் 11 ஆம் திகதிகளில் அல்பிட்டிய, பிடிகல மற்றும் அம்பலாங்கொட பிரதேசங்களில் 5 பேர் சிலரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இது தொடர்பான விசாரணைகளில் பொலிஸ் நிலைய சிரேஷ்ட அதிகாரிகளின் பலவீனம் உள்ளதா என்பது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும் எனவும் அவர் பொலிஸ் மா அதிபர் அங்கு குறிப்பிட்டுள்ளார்.

000

Related posts: