பொலிஸ் கட்டளையிடும் அதிகாரி இன்றுடன்ஓய்வு!

Tuesday, February 5th, 2019

பொலிஸ் விசேட படையணியின் கட்டளையிடும் அதிகாரியும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் அதிபருமான எம்.ஆர்.லத்தீப் இன்றுடன்(05) ஓய்வு பெறுகிறார்.

இந்தத்துறையில் 41 வருடமாக கடமையாற்றியுள்ள அவர், கடந்த இரண்டு வருடங்களாக பொலிஸ் விசேட படையணியின் கட்டளையிடும் அதிகாரியாக கடமையாற்றி வந்தார்.

இவரது தலைமையின் கீழ் கடந்த 6 மாதங்களில் 798Kg ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அண்மையில் தெஹிவளை மற்றும் பேருவளைப் பகுதிகளில் கைப்பற்றப்பட்ட பாரிய தொகை ஹெரோய்ன் கைப்பற்றல் விடயமும் இவரின் தலைமையின் கீழேயே முன்னெடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: