பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு!

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இன்று காவல்துறை உயர் அதிகாரிகள் சிலர் அழைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபர் காரியாலயத்தின் பிரதான பரிசோதகர் எல்.எச். மஹிந்த கருணாரத்ன, முகத்துவாரம் காவல்துறை நிலையத்தின் பிரதான காவல்துறை பரிசோதகர் பி.சி.ஜனக குமார, கொட்டாஞ்சேனை காவற்துறை நிலையத்தின் காவற்துறை பரிசோதகர் ஏ.எச்.எம் சிறிசேன ஆகியோர் குறித்த ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் வாரியபொல காவற்துறை நிலையத்தின் உப காவற்துறை பரிசோதகர் ஆர்.எம்.லஹிரு பிரதீப் உதயங்க மற்றும் பரசன்கஸ்வௌ காவற்துறை நிலையத்தின் காவற்துறை கான்ஸ்டபிள் ஏ.எல். நளின் பண்டார ஆகியோர் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்
Related posts:
இலங்கையில் 3 இலட்சம் டொலர் முதலீட்டு செய்தால் குடியிருப்பு வீசா - நிதியமைச்சர்!
அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள தொழில்நுட்பவியலாளர்கள்!
பட்டதாரிகளுக்கான பயிற்சி வேலைத்திட்டம் மே 11 ஆம் திகதி ஆரம்பம் !
|
|