பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் சேவையிலிருந்து நீக்கம்!

Monday, April 8th, 2019

பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேகநபர்கள் தப்பி சென்ற சம்பவம் தொடர்பில் இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

ஹெரோயின் போதை பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு கொஸ்கம பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேகநபர்களே, கடந்த 06 ஆம் திகதி இவ்வாறு தப்பி சென்றுள்ளனர்.

குறித்த சந்தர்ப்பத்தில் கொஸ்கம பொலிஸ் நிலையத்தின் கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் மற்றும் கடமை நேர பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகஸ்தர் ஆகிய இருவரும் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts: