பொலிஸ் அறிக்கை: கட்டணத்தில் உயர்வு!

Wednesday, November 1st, 2017

எதிர்வரும் நவம்பர் மாதம் 5ஆம் திகதி முதல் பொலிஸ் அறிக்கை பெற்றுக் கொள்வதற்கான கட்டண உயர்வு அமுல்படுத்தப்பட உள்ளதாகவும் குறித்த கட்டண உயர்விற்கு அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இந்த பொலிஸ் அறிக்கை, வெளிநாடு செல்ல உள்ளவர்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிப்போருக்கு மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. இலங்கையிலிருந்து விண்ணப்பம் செய்து இலங்கை முகவரி ஒன்றுக்கு அறிக்கையை பெற்றுக் கொள்வதற்காக ஆயிரம் ரூபா அறவீடு செய்யப்பட உள்ளது.

இதுவரை காலமும் இதற்கான கட்டணமாக 500 ரூபா அறவீடு செய்யப்பட்டு வந்தது. இலங்கையிலிருந்து விண்ணப்பம் செய்து வெளிநாட்டு முகவரிக்கு தபால் செய்யவோ, இலங்கையிலிருந்து வெளிநாடு ஒன்றுக்கு இணையத்தின் ஊடாக அறிக்கையை அனுப்பி வைப்பதற்கு 1500 ரூபா அறவீடு செய்யப்பட உள்ளது.

மாதமொன்றில் சுமார் 6000 பேர் வரையில் பொலிஸ் அறிக்கைகளை பெற்றுக்கொள்ள விண்ணப்பம் செய்வதாக பொலிஸ் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts:

நாடு தழுவிய ரீதியில் நெல் இருப்புக்கள் கணக்கிடப்பட வேண்டும் – அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனம் அரசாங...
சமூக வலைத்தளங்கள் ஊடாக அரசாங்கத்தையும் அதன் கொள்கைகளையும் விமர்சிப்பதைத் தவிர்க்குமாறு அரச பணியாளர்க...
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு ஆறு பொலிஸார் பாதுகாப்பு - பொலிஸ் மா அதிபர் அதிரடி நடவடிக்கை!

சுன்னாகத்தில் குற்றச் செயல்கள் அதிகரிப்பு : பொலிஸார் அசமந்தம்! - குற்றம் சுமத்துகின்றனர் பொதுமக்கள்...
சுற்றாடல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ள கல்வி அமைச்சு முன்வை...
இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் - வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் சந்திப்பு - ஜப்பானுக்க...