பொலிஸ் அத்தியட்சகர்கள் , உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் 44 பேருக்கு இடமாற்றம்!

Thursday, November 29th, 2018

பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் 44 பேருக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இவர்களில் 6 பொலிஸ் அத்தியட்சகர்கள் அடங்குவதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னரும் சுமார் 50 பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பொலிஸ் மா அதிபரால் இடமாற்றங்கள் வழங்கப்பட்டதுடன், அந்த இடமாற்றங்கள் பொலிஸ் ஆணைக்குழுவால் இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: