பொலிஸ் அதிகாரியை தாக்கிய பெண் சட்டத்தரணி கைது!

கொழும்பு புதுக்கடை உயர் நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் பெண் சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற வளாகத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் குறித்த பெண் சட்டத்தரணி ஈடுபட்டுள்ளார்.
நீதிமன்ற கட்டடத் தொகுதிக்குள் நுழையும் இடத்தை குறித்த பொலிஸ் அதிகாரி சோதனையிட்டுள்ளார்.
இதன் போது, பெண் சட்டத்தரணி ஒருவர் பொலிஸ் அதிகாரியின் கைகளை கீறி காயப்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த சட்டத்தரணி இதற்கு முன்னர் பொலிஸ் கடமைகளுக்கு தடை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
காயமடைந்த பொலிஸ் அதிகாரியை இன்று சட்ட வைத்தியரிடம் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அங்கு கிடைக்கும் அறிக்கைக்கமைய மேலதிக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|