பொலிஸ் அதிகாரம் தொடர்பில் தற்போது பேச முடியாது.- பேசினால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது – தமிழ் கட்சிகளின் எம்.பி.க்களிடம் ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் தீர்வுகளை வழங்க முடியுமானபோதும், பொலிஸ் அதிகாரம் தொடர்பில் தற்போது பேச முடியாது. பேசினால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாதென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வடக்கு, கிழக்கு தமிழ் கட்சி எம்.பி.க்களுக்குமிடையில் நேற்று நண்பகல் நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் நடந்த சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறுகையில் –
வலிகாமம் வடக்கிலுள்ள மக்களின் காணிகளை ‘குத்தகை’ (லீசிங்) அடிப்படையில் விடுவிப்பது தொடர்பில் ஆராய்வோம் எனக் கூறியுள்ளார்’.
மேலும் காணிகள் விடுவிப்பு தொடர்பில் சகல பக்கங்களிலும் பிரச்சினைகள் உள்ளன. நான் , அனைத்து பிரச்சினைகளையும் பார்க்க வேண்டும். எனவே முதலில் வடக்கு மக்களின் காணிகளை ”குத்தகை ”அடிப்படையில் அம்மக்களுக்கு வழங்குவோம். பின்னர் அதனை அவர்களுக்கு முழுமையாக உரித்தாக்க நடவடிக்கை எடுப்போம்.
அத்துடன் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு 13 ஆவது அரசியலமைப்புத்திருத்தத்தின் மூலம் தீர்வுகளை வழங்க முடியும். ஆனால் அதிலுள்ள பொலிஸ் அதிகாரம் தொடர்பில் தற்போது பேச முடியாது. பேசினால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|