பொலிஸ்மா அதிபர்யாழ்.விஜயம்: குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் ஆராய்வு!

பொலிஸ் மா அதிபராக பதவியேற்றதன் பின்னர் சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்ணாயக்கவின் ஆலோசனைக்கு அமைவாக, வடக்கு மாகாணத்துக்கான தனது முதலாவது விஜயத்தை பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர இன்று (17) மேற்கொண்டுள்ளார்.
யாழ்.மாவட்டத்தின் குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் மிகுந்த சவால்கள் காணப்படுகின்ற நிலையில் பொலிஸ் மா அதிபராகப் புதிதாகப் பதவியேற்றுள்ள கொண்ட பூஜித ஜயசுந்தர இன்று யாழ் வருகை தந்து யாழ். மாவடடத்திலுள்ள அனைத்துப் பொலிஸ் நிலையங்களினையும் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரிகளை இன்று பகல் யாழ்.மாவட்டச் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இக் கலந்துரையாடலில் யாழ்.மாவட்டத்தில் கட்டுப்படுத்த முடியாமல் அதிகரித்துச் செல்லும் சமூக விரோதக் செயற்பாடுகள் தொடர்பிலும் , பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது.
Related posts:
|
|