பொலிஸார் விடுத்தள்ள எச்சரிக்கை!

Thursday, November 14th, 2019

பிரசார கால எல்லை நிறைவடைந்த பின்னர் நேற்று நள்ளிரவுக்கு பின்னர் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

காவல்துறையின் பேச்சாளர் ருவன் குணசேகர இது தொடர்பில் விடுத்துள்ள குறிப்பில்,

நேற்று இரவுமுதல் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்வரை அனைத்து பிரசாரங்களும் நிறுத்திவைக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தக்காலப் பகுதியில் வாக்காளர்கள் சுயமாக வாக்களிக்கும் வகையில் வாய்ப்புக்கள் வழங்கப்படவேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

இதேவேளை சமூக ஊடகங்களின் பிரசாரங்களும் கண்காணிப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: