பொலிஸார் மீதான வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது!

கோப்பாய் பொலிஸ் நிலைய பொலிஸார் மீதான வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவரை பயங்கரவாத தடைச்சட்டப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
;வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த சத்தியசாகீத்தியன் மற்றும் கொக்குவில் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த சண்முகராசா சானுஜன் ஆகியோரே நேற்று புதன்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இருவரையும் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் பயங்கரவாத தடைச்சட்டப் பிரிவினர் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த இருவரையும் யாழ்.நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
நேற்று அடையாளம் காணப்பட்ட 31 கொரோனா நோயாளிகளில் 21 பேர் கடற்படையினர் - சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசி...
கொவிட் தடுப்பூசிகளை பதுக்கி வைப்பதைத் தவிரங்கள் - உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்து!
ஜனாதிபதி பதவி விலக மாட்டார் - மீண்டும் தெரிவித்தார் ஜோன்சன் பெர்ணான்டோ!
|
|