பொலிஸார் தொடர்பாக முறைபாடுகள் தெரிவிக்க அழையுங்கள்!

Thursday, August 11th, 2016

பொலிஸ் அதிகாரிகளின் நடத்தைகள் தொடர்பாக முறைப்பாடுகளை 24 மணிநேரம் இயங்கும் 071 -0361010 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிய தருமாறு தேசிய பொலிஸ் ஆணைக்குழு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் என். ஆரியதாச பொதுமக்களிடம் இந்த கோரிக்கை விடுத்துள்ளார். பொலிஸ் அதிகாரிகளால், பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகள் குறித்த முறைப்பாடுகளை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப சூழலில் இருக்கும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பிரதான அலுவலகத்திலும் முன்வைக்க முடியும் என அவர் கூறியுள்ளார்.

மேலும் பொதுமக்கள் தமது முறைப்பாடுகளை 8 மாகாணங்களில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அலுவலகங்களிலும் செய்ய முடியும் எனவும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: