பொலிஸார் அதிரடி – 1400 க்கும் மேற்பட்ட சாரதிகள் கைது!

Friday, December 21st, 2018

பண்டிகை காலத்தை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மதுபோதையுடன் வாகனத்தை செலுத்திய 1400 க்கும் அதிகமான சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தில். மதுபோதையுடன் கைது செய்யப்பட்ட சாரதிகளின் எண்ணிக்கை அதிகம் என வாகன போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்பிற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில், வாகன போக்குவரத்து தொடர்பில், சாரதிகளிடமிருந்து 2 ஆயிரத்து 505 மில்லியன் ரூபா அபராத பணம் அறவிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அத்தியட்சகர் இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார்.

Related posts: