பொலிஸார் அதிரடி : குடாநாட்டில் 50 பேர் கைது!

Thursday, August 16th, 2018

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற குழு மோதல்கள் தொடர்பில் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த மாதத்தின் முதலாம் திகதியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், மானிப்பாய், கோப்பாய், சுன்னாகம் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை போது, யாழில் வன்முறை செயற்பாடுகளுக்கு தொடர்புடைய 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த பிரதேசத்தில் இயங்கும் குழுக்களுக்கு இடையில் மோதல் மற்றும் பொது மக்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை, கொள்ளையில் ஈடுபட்டமை ஆகிய செயற்பாடு தொடர்பில் இந்த கைது சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts: