பொலிஸாருக்கு எதிரான சித்திரவதைக் குற்றச்சாட்டு விசாரணை பெப்ரவரியில் – யாழ்.மேல் நீதிமன்றம் நேற்று அறிவிப்பு!

151007110619_jaffna_court_640x360_bbc_nocredit-720x480 Wednesday, January 11th, 2017

சுன்னாகம் பொலிஸ் தடுப்பிலிருந்த சந்தேகநபர் சித்திரவதையின் பின்னர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் பொலிஸாருக்கு எதிரான சித்திரவதைக் குற்றச்சாட்டு வழக்கு விசாரணைகள் யாழ். மேல் நீதிமன்றில் 4 நாள்கள் இடம்பெறவுள்ளன.

அதற்கான திகதிகளும் நேற்று அறிவிக்கப்ப்டன. கொலை வழக்கில் விளக்கமறியலில் உள்ளவர்களுக்குப் பிணைகோரும் மனுவும் யாழ். மேல் நீதிமன்றிர் நேற்றுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. குற்றஞ்சாட்டப்பட்ட 7 பொலிஸாரும் மன்றில் முற்படுத்தப்பட்டளனர். கோபி என்றழைக்கப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் வெளிநாட்டிலுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

அவருக்குப் பிடியாணை ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட நிலையில் நேற்றும் அது நினைவூட்டப்பட்டது. பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர் வழக்கிலுள்ள 8 பொலிஸ் உத்தியோக்தத்தர்களில் 7ஆவது சந்தேகநபர் அவர் இன்றி வழக்கு விசாரணையை ஆரம்பிப்பதற்கு சான்று அவணம் தேவை.

அந்தச் சந்தேகநபரது தயார் சுகவீனமுற்றுள்ளார். அவரைப் பெண் ஒருவர் பராமறிக்கிறார் அந்தப் பெண்ணின் வாக்குமூலம் மேல் நீதிமன்றில் நேற்றுப் பெற்றப்பட்டது. அதன் பின்னர் சித்திரவதை வழக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 21, மார்ச் 14,15 ஆம் திகதிகள் மற்றும் ஏப்ரல் 4ஆம் திகதி ஆகிய தினங்களில் விசாரிக்கப்படும் என்று நீதிபதி அறிவித்தார்.

இதே சம்பவத்தில் கொலை வழக்கு கிளிநொச்சி நீதிவான் மன்றில் விசாரணை நிறைவடைந்துள்ளது. அந்த வழக்கில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் சம்பவம் இடம்பெறும் போது கடமையாற்றிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிந்தக்க பண்டார உள்ளிட்ட 5பேர் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

அவர்களைப் பிணையில் விடுவிக்குமாறு கோரி யாழ். மேல் நீதிமன்றில் நேற்று எதிரிகளின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணியால் விணை மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அது பற்றிய அறிவித்தல் சட்டமா அதிபர் திணைக்கள பிரதி மன்றாடியார் குமார் ரட்ணம் மன்றில் நேற்று முன்னிலையாகினார் எதிரிகள் சார்பில் சட்டத்தரணிகள் முன்னிலையாகினார்

பின்னணி

2011அம் ஆண்டு திருட்டுக் குற்றச்சாட்டில் சுன்னாகம் பொலிஸாரால் 5பேர் கைது செய்யப்பட்டனர். 5 சந்தேக நபர்களில் ஒருவர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் வைத்து சித்தரவதை செய்து கொலை செய்யப்பட்டிருந்து கண் கண்ட சாட்சிகள் மல்லாகம் நீதிவான் மன்றில் கடந்த வருடம் தெரிவித்திருக்கிறனர். அது தொடர்பாக அப்போதைய சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 8பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

அதில் கொலைக் குற்றச்சாட்டில் 5பேருக்கு எதிராக கிளிநொச்சி நீதிவான் மன்றத்திலும் சித்திரவதை தொடர்பாக அந்த 5பேர் உள்ளிட்ட 8 பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது சந்தேக நபர்களில் ஒருவரான கோரி வெளிநாட்டில் உள்ளார். அவருக்குப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது ஏனைய 7பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

151007110619_jaffna_court_640x360_bbc_nocredit-720x480


தொடரும் மழையால் கிளிநொச்சியில் 7000 க்கும் அதிகமானோர் பாதிப்பு!
நாளை வடக்கு - கிழக்கு பகுதிகளில் கடும் மழை பெய்ய வாய்ப்பு!
நிரந்தர கப்பல் போக்குவரத்தை நான் கோரவில்லை -வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே!
தரம் 5 புலமைப் பரிசில் மேன்முறையீடு 15ஆம் திகதிவரை ஏற்றுக்கொள்ளப்படும்!
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் தொடர்ச்சியாகப் போராடத் தீர்மானம்