பொலிஸாரின் காவலிலிருந்த  9பேர் கொலை – ஆசிய மனித உரிமை ஆணைக்குழு தகவல்!

Tuesday, October 24th, 2017

2017 ஆம் ஆண்டில் பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஆசிய மனித உரிமை ஆணைக்குழு தகவல் தெரிவித்துள்ளது.

இலங்கையில் இவ் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒன்பது பேரும் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த விடயமானது ஆசிய மனித உரிமை ஆணைக்குழுவினால் வெளியிட்டுள்ள அறிக்கையில்குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் தரப்பினர்  சாதாரண பொதுமக்களின் உயிர்கள் தொடர்பாக அசமந்த போக்கினைப் பின்பற்றியுள்ளமை தெளிவாகின்றது என ஆசிய மனித உரிமைஆணைக்குழு குற்றம் சுமத்தியுள்ளது.

இந்த நிலைமைக்கு நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் சேவையாற்றி வரும் பொலிஸ்உத்தியோகத்தர்கள் அதிகாரிகள் பொறுப்புக் கூற வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் உயிர்குறித்து பொலிஸ் திணைக்களத்தின் உயர் மட்டத்தினர் முதல் கடைநிலையினர் வரையில் அசமந்தப்போக்கினை பின்பற்றும் ஓர் நிலையே தற்போது காணப்படுகின்றது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Related posts: