பொலிஸாரினால் இளைஞன் சுட்டுக்கொலை! ?

Sunday, July 21st, 2019

யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞன் யார் என்பது தொடர்பில் அவரது உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.

நேற்றிரவு மானிப்பாயில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார்.

கொடிகாமம் கச்சாயைச் சேர்ந்த 23 வயதான செல்வரத்தினம் கவிகஜன் என்ற இளைஞனே உயிரிழந்தார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சடலத்தை இன்று அதிகாலையில் அவரது உறவினர்கள் பார்வையிட்டனர்.

இதன்போது குறித்த இளைஞன் யார் என்பது தொடர்பில் உறுதி செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆவா குழுவை சேர்ந்த ஆறு பேர் மானிப்பாயிலுள்ள வீடொன்றின் மீது தாக்குதல் நடத்த சென்ற போது பொலிஸார் சோதனை செய்ய முயன்றுள்ளனர்.

இதன்போது இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்து பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். அதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்ததுடன் இன்னொருவர் காயம் அடைந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts: