பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிமன்றால் தள்ளுபடி!

Friday, November 4th, 2016

தடை செய்யப்பட்ட கத்தியினை வைத்திருந்தார் என வழக்கு தாக்கல் செய்த பொறுப்பதிகாரியின் செயல் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சாட்சி மூலம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இச் செய்தி தொடர்பாக மேலும் தெரிவிக்கப்படுவதாவது, இவ் வருட முற்பகுதியில் கச்சாய் அம்மன் கோயில் பகுதியில் இரவு 11மணியளவில் தடை செய்யப்பட்ட கத்தி மற்றும் டோச் லைட்டுடன் நின்றவரை இரவு ரோந்துக்கடமையில் ஈடுபட்டிருந்த கொடிகாமம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைபடுத்தியிருந்தார். குறித்த நபருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டபோது அவர் குற்றவாளி என நீதிமன்றில் தெரியப்படுத்தியிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் குறித்த வழக்கு விளக்கத்திற்க எடுக்கப்பட்டது.

இச் சம்பவம் தொடர்பில் கைத செய்திருந்த பொலிஸ் உத்தியோகத்தர் நீதிமன்றில் தனது சாட்சியினை பதிவு செய்திருந்தார். குறித்த நபர் இரவு 11மணியளவில் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் கச்சாய் அம்மன் கோவிலடியில் தடைச் செய்யப்பட்ட கத்தி மற்றும் ரோட் லைட் ஒன்றுடன் நின்றிருந்தார். அவரை தான் சந்தேகத்தில் கைது செய்ததாக குறிப்பிட்டார். அப்பொழுது நீதிமன்றம் குறித்த பொலிஸ் சாட்சியிடம் கத்தி தடைசெய்யப்பட்டதா என வினவப்பட்டது. குறித்த கத்தி தடைசெய்யப்பட்ட ஒன்று அல்ல என்றும் அப்பகுதியில் கடமையாற்றிய பொறுப்பதிகாரியே இவ்வாறு வழக்கினை பதிவு செய்ததாக பொலிஸார் குறிப்பிட்டார். குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் சாட்சியின் உண்மைத்தன்மையினை புரிந்து கொண்ட நீதிவான் தனது பாராட்டினை தெரிவித்தார். அத்துடன் குற்றம் சாட்டப்பட்ட நபரை வழக்கில் இருந்தம் விடுவித்தார்.

maxresdefault

Related posts: