பொலித்தீன், பிளாஸ்ரிக் பாவனையை கட்டுப்படுத்த விழிப்புணர்வுப் பேரணி !

Saturday, March 18th, 2017

பிளாஸ்ரிக் பாவனையால் ஏற்படும் தீமைகளை எடுத்துக் கூறியும், அவற்றைப் பயன்படுத்துவதிலிருந்து மக்கள் விடுபட வேண்டும் என்று வலியுறுத்தியும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் பேரணி தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையால் நடத்தப்பட்டுள்ளது.

தெல்லிப்பழை சுகாதார அதிகாரி நந்தகுமாரின் ஏற்பாட்டில் தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையிலிருந்து காலை 8 மணியளவில் ஆம்பமான பேரணி காலை கே.கே.எஸ் வீதியூடாக மல்லாகம் சந்திவரை இடம்பெற்றது. சாலையோரங்களில் காணப்பட்ட பிளாஸ்ரிக், பொலித்தீன் போன்ற கழிவுகப் பொருட்களை பேரணியில் சென்றவர்கள் சேகரித்தனர் அவை வலி.வடக்கு பிதேச சபை உழவு இயந்திரத்தின் மூலம் கழிவு அகற்றும் முகாமைத்துவ நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இவ்வாறு சேரித்த பொலித்தீன், பிளாஸ்ரிக் பொருட்கள் 3 உழவு இயந்திரங்களில் ஏற்றப்பட்டு அகற்றப்பட்டன.

பொலித்தீன், பிளாஸ்ரிக் கழிவுபொருட்களை அகற்றும் போது அவவைகளால் ஏற்படும் தீங்கு நோய்த் தொற்றுகள் பற்றிய விளக்கங்கள் வாய் மூலமாகவும் துண்டறிக்கைகள் மூலமாகவும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டன. பொதுமக்கள் வீதியோரங்களிலும் குடியிருப்பு வளவுகளிலும் பொலித்தீன், பிளாஸ்ரிக் கழிவுபொருட்களை வீசி விடுகின்றனர். இதனால் மாசு அடைந்து பொது மக்களுக்கு அவை தீங்கு ஏற்படுத்துகின்றது.

இவற்றிலிருந்து நாம் விடுபட அனைவுரும் ஒன்றுபட்டு வீட்டில் பொது இடங்களில் பொலித்தீன், பிளாஸ்ரிக் பாவனையை முற்றாக ஒழிக்க வேண்டும் என பொதுச் சுகாதார பரிசோதகர் விளக்கமளித்தார்.

 

Related posts: