பொலித்தீன் பாவனைக்கு எதிராக சட்ட நடவடிக்கை – சுற்றாடல் அதிகார சபை!

Saturday, May 19th, 2018

பொலித்தீன் பைகள் பொருட்கள் உற்;பத்தி மற்றும் விற்பனை ஆகியவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொறுப்பை சுற்றாடல் அதிகாரசபை பொலிஸ் திணைக்களத்திடம் ஒப்படைக்க உள்ளதாக இலங்கை சுற்றாடல் அதிகாரசபை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

பணிப்பாளர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில் பொலித்தீன் பொருட்களின் பாவனைக்கான தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டு ஒரு வருடத்துக்கு மேலாகிவிட்ட போதிலும் அதனை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகள் பல்வேறு காரணங்களுக்காக தொடர்ந்து பிற்போடப்பட்டுவந்துள்ளது.

பொலித்தீன் பொருட்களின் பாவனைக்கான சட்ட நடவடிக்கைகளை பொலிஸ் திணைக்களத்திடம் ஒப்படைக்க உள்ளதைத் தொடர்ந்து பொலித்தீன் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்களும் பொலித்தீன் பைகள் மற்றும் பொருட்களை பாவனைக்குட்படுத்துபவர்கள் பொலித்தீன் தடைச்சட்டத்தின் கீழ் பொலிசாரால் கைது செய்யப்படுவதுடன் நீதிமன்றத்தின் மூலம் வழக்குகள் தொடுத்து தண்டனையும் அபராதத்தை விதிக்கும் நடவடிக்கைகளை பொலிசாரால் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவித்தார்.

கடந்தகாலங்களில் இலங்கை சுற்றாடல் அதிகாரசபை உத்தியோகத்தர்களால் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. நாடெங்கும் 2356 சுற்றிவளைப்புக்கள் கடந்த ஏப்ரல் மாதம் 23ம் திகதியிலிருந்து 27ம் திகதி வரை மேற்கொண்டிருந்ததையும் சுட்டிக்காட்டினார். இதன் போது 736 பேர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

Related posts:


யாழ்.மாவட்டத்தில் 7 பிரதேச செயலகங்களில் கடமையாற்றிய 8 திட்டமிடல் அதிகாரிகளுக்கு திடீர் இடமாற்றம்!
முன்பள்ளிகளை போட்டி மிகுந்த கல்வி வழங்கும் மற்றொரு பாடசாலையாக மாற்றாமல் குழந்தைகளுக்கு சுற்றுச்சூழலை...
அரசியல் சவால்களை வெற்றிகொள்ள அனைத்து இலங்கையர்களும் ஒன்றாக கைகோர்க்க வேண்டிய நேரம் இது - ஜனாதிபதி கோ...