பொலித்தீன் தடை: தெல்லிப்பழை பிரதேச செயலகம் முன்மாதிரியாக உள்ளது.

Monday, September 11th, 2017

பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பாவனையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து முற்றாக அதன் பாவனையிலிருந்து விடுவிக்கும் பொருட்டு தெல்லிப்ழை பிரதேச செயலகம் முன்னாதிரியாகச் செயற்படுகிறது என தெரிவிக்கப்படுகிறது.

தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் அண்மைக்காலமாக நடைபெறுகின்ற கூட்டங்கள், கருத்தரங்குகளில் உணவு பரிமாறப்படும் போது அங்கு வாழைஇலை அல்லது தேக்கம்இலை மற்றும் தண்ணீர் குடிப்பதற்கு சில்வர் பேணி போன்றன பாவனையில் உள்ளன. பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பாவனையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து முற்றாக அதன் பாவனையிலிருந்து விடுவிக்கும் பொருட்டே இவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. பிரதேச செயலாளர் இதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளார்.

பிரதேச செயலகத்தில் பணியாற்றும் பணியாளர்கள் தமது உணவுகளை வாழையிலையில் கட்டியும், உணவுப்பெட்டிகளிலும் கொண்டும் அலுவலகக் கடமைக்கு வருகின்றார்கள் எனவும், கூட்டங்கள், கருத்தரங்கு நடைபெறும் போது பிளாஸ்ரிக் தண்ணீர் போத்தல்களும் தவிர்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இது ஏனைய அலுவலகங்களுக்கு முன்னுதாரணமாக அமையும் என உத்தியோகத்தர்கள் சிலர் தெரிவித்தனர்.