பொலித்தீன் தடை செய்யப்பட்ட விதம் பிழையானது!

பொலித்தீன் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்ட விதம் பிழையானது என பொலித்தீன் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அனுர விஜேதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்துத் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்.பொலித்தீன் மற்றும் லஞ்சீட் ஆகியன தடை செய்யப்பட வேண்டும் என்ற தீர்மானம் சரியானதே எனினும் அதனை அமுல்படுத்தும் விதம் பிழையானது.இந்த தடையானது அவசர அவசரமாக மேற்கொள்ளப்படக் கூடியதல்ல. தடையினால் நுகர்வோரும் பாதிக்கப்படுகின்றனர்.மாற்று வழிகள் எதனையும் அறிமுகம் செய்யாது இவவாறு தடை விதிப்பது நியாயமற்றது.
மக்களை தெளிவூட்டி இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டிருக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
தவணை பரீட்சைகள் அடுத்த மாதம் ஆரம்பம்!
வாள்வெட்டால் காயமடைந்தவர் அட்டகாசம்: பொலிசார் அசமந்தம் என குற்றச்சாட்டு !
ரஷ்யாவுக்கு தபால் மூலம் பொருட்கள் - பொறுப்பேற்பதற்கு தபால் திணைக்களம் தீர்மானம்!
|
|