பொலித்தீன் தடை – இலங்கையில் நெருக்கடி!

தரமற்ற பொலித்தீன் உற்பத்தி மற்றும் பாவனை காரணமாக இலங்கையில் நெருக்கடி நிலை உருவாகி வருவதாக ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
பொலித்தீன் உற்பத்திகள் உரிய தராதரங்களுக்கு அமைய பயன்படுத்தப்படாததன் காரணமாக பெரும் சுற்றாடல் நெருக்கடிகள் தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2006ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20 மைக்ரோனை விட தடிப்புக்குறைந்த பொலித்தீனை தடைசெய்து அரசாங்கம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
ஆனால், அன்றைய காலத்துடன் ஒப்பிடுகையில் இன்று முறையற்ற பொலித்தீன் பாவனை இடம்பெறுவதாக விவசாய ஆராய்ச்சி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
Related posts:
மாகாண சபை தேர்தல் விவகாரம் : கூடுகிறது ஆணைக்குழு!
நாடாளுமன்றம் அனுமதி - இலங்கையின் வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை!
ஈஸ்டர் கொண்டாட்டத்துக்காக அதிகபட்ச பாதுகாப்பு உத்தரவாதம் - இராணுவ தளபதி அறிவிப்பு!
|
|