பொலிசாரின் சித்திரவதையால் இளைஞன் உயிரிழப்பு – பலப்படுத்தப்பட்டது வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் பாதுகாப்பு!

Monday, November 20th, 2023

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பகுதியில் இன்று நண்பகல்முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக இரும்பு பாதுகாப்பு வேலிகள் கொண்டு வரப்பட்டு அங்கு விசேட அதிரடிப் படையினரும் ஆயுதங்களுடன் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்பகுதியில் போராட்டம் இடம்பெறலாம் எனும் அச்சுறுத்தல் காரணமாக குறித்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பதாக நீதிமன்ற உத்தரவின்படி யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விளக்கமறியல் கைதி உயிரிழந்தமை தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிசார் மீது உறவினர்கள் குற்றஞ்சாட்டும் நிலையில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் வட்டுக்கோட்டை பொலிஸார் இருவருக்கு  இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விளக்கமறியல் கைதி உயிரிழந்தமை தொடர்பில் யாழ்ப்பாண பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் ஒரு விசாரணையும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகத்தினால் பிறிதாக ஒரு விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: