பொலிசாரால் ஊரடங்கு அனுமதிப்பத்திரம் விநியோகிக்கப்பட மாட்டாது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவிப்பு!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் பொலிஸாரின் ஊடாக ஊரடங்கு அனுமதி பத்திரம் விநியோகிக்கப்படமாட்டதென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்களுக்கு அமைய அத்தியாவசிய சேவைகளுக்கு செல்பவர்கள் தங்களது அடையாள அட்டை அல்லது நிறுவன பிரதானிகளால் வழங்கப்படும் கடிதங்களை சோதனை நடவடிக்கையில் ஈடுபடுகின்ற பொலிஸாரிடம் காண்பிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும் - ஐரோப்பிய ஒன்றியம்!
விலை உயர்வை கட்டுப்படுத்த அரிசியை இறக்குமதி செய்ய யோசனை - அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!
நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார சவால்களை அரசியல் சாசனத்திற்கு அமைவாக எதிர்கொள்வதற்கு நடவடிக்கை - ...
|
|