பொறுப்பற்ற விதத்தில் செயற்படும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தொடர்பில் நடவடிக்கை – சுகாதாரத்துறை பிரச்சினைகளுக்கு ஒரு மாத காலத்திற்குள் தீர்வு – சுகாதார அமைச்சர் கெஹெலிய நம்பிக்கை!

Wednesday, April 5th, 2023

பொறுப்பற்ற விதத்தில் செயற்படும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலவியதால் சுகாதாரத்துறையின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை. எனினும், இன்னும் ஒரு மாத காலத்திற்கு தீர்வைப்பெற்றுக் கொடுக்க முடியும் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அதேவேளை, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, (04) நாடாளுமன்ற அமர்வின்போது அந்த சட்டமூலம் சபையில் சமரப்பிக்கப்படமாட்டாது. பிறிதொரு தினத்தில் அந்த சட்டமுலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்பப்டவள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: