பொருளாதார ரீதியில் ஆபத்தான நிலையில் இருந்து நாடு இன்னும் மீளவில்லை – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!

பொருளாதார ரீதியில் ஆபத்தான நிலையில் இருந்து நாடு இன்னும் மீளவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் நேற்று (23) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அடுத்த தேர்தலில் நாட்டின் பொருளாதாரம் முக்கியப் பிரச்சினையாக பேசப்படும். பொருளாதாரத்தைக் கையாளும் திறன் உள்ளவர்களே ஆட்சிக்கு வரவேண்டும். தொலைநோக்குப் பார்வையே பிரதானமாக இருக்க வேண்டும். ஏனெனில் பொருளாதாரம் இன்னும் ஆபத்தான நிலையில் இருந்து மீளவில்லை. என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
முன்கூட்டிய அறிவிப்பின்றி பணிப்புறக்கணிப்பு - அரசாங்க மருத்துவ அதிகாரிகள்!
புலமைப் பரிசில் பரீட்சை கட்டாயம் இல்லை – கல்வியமைச்சர்!
சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய தேர்தலை நடத்த எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!
|
|