பொருளாதார முன்னேற்றத்திற்காக உயர்ந்தபட்ச பலத்தை பயன்படுத்துவேன் – புதிய நிதியமைச்சர்!

Thursday, May 25th, 2017

நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்காக தனது உயர்ந்தபட்ச பலத்தை பயன்படுத்துவேன் என புதிய நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

2015ஆம் ஆண்டு 16ஆம் இலக்க நிதி ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழ் 7 யோசனைகள் நேற்று பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. விவாதத்தை ஆரம்பித்து உரையாற்றிய நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர, புதிய நூற்றாண்டுக்குப் பொருத்தமான பொருளாதார சீர்திருத்தங்கள் மூலம் நாட்டிற்குத் தேவையான பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு உயர்ந்தபட்ச பலத்தை பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டார்.

கடன் சுமை காரணமாக வீழ்ச்சி கண்டுள்ள பொருளாதாரத்தை சரியான மார்க்கத்திற்கு கொண்டுவர அரசாங்கத்தால் முடிந்துள்ளது.எனினும், குவிந்துள்ள கடன் சுமையிலிருந்து மீள்வதற்கு தொடர்ந்தும் போராட வேண்டியுள்ளது. 30 வருட கால யுத்தத்தில் உயிரிழந்த அனைவரும் இலங்கையர்களாவர். அந்த யுத்தம் காரணமாக அபிவிருத்தி இலக்குகளை வெற்றிகொள்ள முடியாமல் போனது. நாட்டை முன்னேற்ற வேண்டுமானால், ஊழல், அடிப்படைவாதம், இனவாதம் என்பன ஒழிக்கப்பட வேண்டுமென்று அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

Related posts: