பொருளாதார மீட்சிக்கான இலங்கையின் பாதையில் கடன் மறுசீரமைப்பின் முக்கியத்தும் கடுமையானது – இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோசி ஹிடேக்கி வலியுறுத்து!

Saturday, February 17th, 2024

பொருளாதார மீட்சிக்கான இலங்கையின் பாதையில் கடன் மறுசீரமைப்பின் கடுமையான முக்கியத்துவத்தை இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோசி ஹிடேக்கி ((Mizukoshi ideaki) வலியுறுத்தியுள்ளார்.

சுதந்திரத்திற்குப் பின்னர் மிகவும் கடுமையானதாகக் கருதப்படும் இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் பன்முகத் தன்மையில் நாடு எதிர்கொள்ளும் சவால்களின் சிக்கலான தன்மையை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியானது அதன் கடன் நிலைத்தன்மை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஒரு விரிவான அணுகுமுறையை அவசியமாக்கியது.

எனினும் பாரிஸ் கிளப்பில் அங்கம் வகிக்காத சீனா மற்றும் இந்தியா போன்ற பாரியளவில் கடன் வழங்குநர்களுடன், கடன் மறுசீரமைப்புக்கான பாரம்பரிய வழிகள் போதுமானதாக இருக்கவில்லை.

இதனையடுத்து, நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் இந்தியாவுடன் இணைந்து, உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவை ஆரம்பிக்க முனைப்பான நடவடிக்கைகளை எடுத்தது.

பேச்சுவார்த்தைகளை எளிதாக்குதல் மற்றும் முயற்சிகளை முன்னெடுப்பதில் ஜப்பானின் இந்த ஈடுபாடு கடந்த நவம்பரில் உடன்படிக்கையை எட்டியது.

இந்தநிலையில் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு முன்முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதில் ஜப்பானின் உறுதிப்பாட்டை இலங்கைக்கான தூதுவர் மிசுகோசி ஹிடேக்கி மீண்டும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


யாழ் மாவட்டத்தில் இந்து ஆலயங்களில் சுகாதார நடைமுறை சரியாக பின்பற்றப்படுவதில்லை - யாழ் மாவட்ட செயலகம்...
வெளிநாட்டுப் பெண் மீது பாலியல் துன்புறுத்தல் - பத்து இளைஞர்களை விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீத...
அடுத்த மாதம் முதல் அரை சொகுசு பேருந்து சேவைகள் இரத்து - தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பு!